Actor Rajinikanth meet his fans today

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்திக்கிறார். ஏற்கனவே ஒரு முறை அவர் ரசிகர்களை சந்தித்துள்ள நிலையில் இந்த இரண்டாம் கட்ட சந்திப்பில் அரசியலுக்கு வருவது குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகா் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போதே அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்துகிறார். இந்த சந்திப்பானது வழக்கம்போல கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேரை சந்திக்க உள்ளதாகவும் தெவிக்கப்பட்டுள்ளது.



சந்திப்பின் முடிவில் அவா் அரசியல் பிரவேசம் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவாா் என்று ரசிகா்கள் எதிர்பார்க்கப்படுகிறது..

ஏற்கனவே ரஜினிகாந்தின் சகோதரா், ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் கட்சி தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோன்று காந்திய மக்கள் இயக்க தலைவா் தமிழருவி மணியனும் இதே கருத்தை முன்மொழிந்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.