Asianet News TamilAsianet News Tamil

விருது பெற்ற சந்தோஷத்தில் நன்றி கூறி அறிக்கை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) 'தாதா சாஹேப் பால்கி விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth issued a statement thanking for accepting thedadasaheb phalke  award
Author
Chennai, First Published Oct 25, 2021, 7:52 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தாதா சாஹேப் பால்கி விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்த நிலையில் தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

திரையுலகில் சாதனை மனிதர்களாக பார்க்கப்படுபவர்களுக்கு, வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கி விருது, இன்று டெல்லியில் நடைபெற்ற 67 ஆவது, தேசிய விருது விழாவில் வழங்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட, திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் இதில் விருது வழங்கப்பட்டது.

Actor Rajinikanth issued a statement thanking for accepting thedadasaheb phalke  award

45 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய சூப்பர் டூப்பர் நடிப்பாலும்,  தனித்துவமான ஸ்டைலாலும் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு... தாதா சாஹேப் பால்கி விருது வழங்கப்பட்டதற்கு, பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் அறிக்கை மூலம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth issued a statement thanking for accepting thedadasaheb phalke  award

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கி விருதினை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் திரு.கே  பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் திரு.சத்யா நாராயண ராவ்கெய்க்வாட் அவர்களுக்கும் , என்னுடைய நண்பர் திரு.ராஜ் பகதூர் அவர்களுக்கும் என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் , திரை அரங்க உரிமையாளர்கள் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios