Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..! மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குனர், நடன பயிற்சியாளர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு இயற்க்கை பேரிடர் மற்றும், பலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய தானால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து நல்ல மனிதர் என ஓவ்வொரு முறையும் நிரூபித்து வருபவர் ராகவா லாரன்ஸ்.
 
actor raghava lawrence requesting tamilnadu government
Author
Chennai, First Published Apr 13, 2020, 12:05 PM IST
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குனர், நடன பயிற்சியாளர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு இயற்க்கை பேரிடர் மற்றும், பலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய தானால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து நல்ல மனிதர் என ஓவ்வொரு முறையும் நிரூபித்து வருபவர் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் இவர் கடந்த வாரம் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய பங்காக ரூபாய் 3 கோடி நிதி உதவி அளித்த நிலையில், நாளைய தினம் மேலும் தான் செய்ய உள்ள உதவிகள் பற்றி அறிவிக்க போவதாக தெரிவித்தார். தற்போது இது குறித்து நண்பர்கள் மற்றும் ஆடிட்டர் போன்றவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நாளை அறிவிக்க இருந்த நிலையில் திடீர் என, தமிழக அரசு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு மறு பரிசீலலை செய்ய வேண்டும் என, புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாவது... 

actor raghava lawrence requesting tamilnadu government

அனைவருக்கும் வணக்கம்!

'கொரோனா'  தடுப்பு நடவடிக்கையில், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அதேசமயம் இந்த 'கொரோனா' ஊரடங்கினாள்,  சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ,  தனி நபர்களோ,  உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

actor raghava lawrence requesting tamilnadu government

ஏனெனில் அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களை தந்திட இயலாது என்பதே  எதார்த்தம். அவ்வகையில்,  ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே...  நான் 'கொரோனா'  தடுப்பு  நிவாரண நிதியை அளித்த கையோடு, அடுத்த கட்டமாக வருகிற 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு முதல், நானும் எனது நண்பர்களும் தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சில சேவை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்.

இந்நிலையில் தான் நமது தமிழக அரசின் இந்த தடை உத்தரவு என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு வேண்டுமானால், இப்படி செய்யலாம் தன்னார்வலர்கள் மக்களுக்கு பொருட்களை வழங்குகிற நடைமுறையில், இன்னும் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதோடு போலீசாரின் துணையோடு கடைபிடிக்குமாறு உத்தரவிடலாம்.

 நம்மை பொருத்தவரை நோய் தொற்று விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வருகிறது நடவடிக்கைகள், அருமை... அற்புதம்... அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அதேநேரம் காய்கறி, பழங்களை, இலவசமாக கொடுக்கக்கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிற, இதே நாட்டில்தான் அளவில்லாமல் அன்பை  கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதனால் தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கூடாது என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ராகவா லாரன்ஸ் தன்னுடை அறிக்கையின் மூலம் கூறியுள்ளார்.

 
Follow Us:
Download App:
  • android
  • ios