பிரபல தெலுங்கு நடிகர் ராணா உடல் நிலை குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. 

சிறுநீரக பிரச்சனை:

நடிகர் ராணா கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 

மேலும் ராணாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ராணாவின் தயார் இவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டது. 

வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்:

இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து ராணாவின் தம்பி அபிராம் மீது பாலியல் குற்றம் சுமற்றிய ஸ்ரீரெட்டியும். ராணாவின் உடல் நலம் பற்றி பரவி வரும் தகவல் வருத்தம் அளிப்பதாக கூறி, விரைவில் குணமடைய கடவுளை பிராத்தனை செய்வதாக கூறியிருந்தார்.

விளக்கம் கொடுத்த ராணா:

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் நலம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ராணா. 

இது குறித்து அவர் கூறியுள்ளது 'எனது உடல் நலம் குறித்து பல வதந்திகள் பரவி உள்ளது. எனக்கு சிறுநீரகம் பிரச்சனை இல்லை. ரத்த அழுத்தம் தான் உள்ளது. இதனால் தற்போது தனக்கு நடைபெற இருந்த கண் அறுவை சிகிச்சை நடைபெறாத நிலை உள்ளதாகவும் மற்ற படி தான் நன்றாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.