நடிகர் பிரஷாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல்  வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நைட்த்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது ஆயூஷ்மான் குரானாவுக்கும், சிறந்த  இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும்  'அந்தாதூன்' அள்ளியது.

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குகிறார். தபு நடித்த கதாபாத்திரத்தில்  நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த அப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியான நிலையில், தற்போது  புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் வித்தியாசமான டைட்டில் வெளியாகியுள்ளது. 'அந்தகன்' என பெயரிப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.