actor prashanth acting rajini title

விஜய், அஜித்துக்கு நிகராக ஒரு காலத்தில் வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சில நாட்கள் திரையுலகத்தை விட்டு விலகியே இருந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் சாகசம் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படம் பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறாததால் நல்ல கதைக்காக காத்திருந்தார்.

தற்போது இயக்குனர் ஜீவாஷங்கரின் உதவியாளர் வெற்றிச்செலவன் இயக்கவுள்ள முதல் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஆன "ஜானி" படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த தலைப்பு முறையான அனுமதியோடு பெற பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக அனன்யா சோனி என்பவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து பிரஷாந்த், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்த "நான்" படத்தின் ஹிந்தி ரீ மேக்கிலும் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல இவருடைய தந்தை தயாரிக்கும் குயின் படத்தின் தமிழ் ரீ மேக்கில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.