வீடியோ ஜாக்கியாக பிரபல தொலைக்காட்சி மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகர் ப்ரஜின். பின் பெண் என்கிற  சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.  இதை தொடர்ந்து அஞ்சலி, காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது விஜய் டிவியில் இவர் நடித்து வரும் சின்னதம்பி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஷ்யூம் , பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள்  அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் நிவின்பாலி, மலையாளத்தில்  நடிக்க உள்ள காதல் மற்றும் அதிரடி படமாக உருவாகும்,  படம் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரஜின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தை அறிமுக இயக்குனர் தயன் சீனிவாசன் இயக்குகிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.