இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படம் இந்த பொங்கலை தலைவர் பொங்கலாக மாற்ற வருகிறது, என்பது நாம் அறிந்தது தான்.

'தர்பார்' படத்தை எதிர்பார்த்து, பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, தலைவர் படத்துக்கே டஃப் கொடுக்க வருகிறார் 'பொன் மாணிக்கவேல்'.

அதாவது, நடிகர் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்து வரும், ஆக்ஷன் - திரில்லர் திரைப்படம் தான் 'பொன் மாணிக்கவேல்'. பெயருக்கு ஏற்றது போல், இந்த படத்தின் டீசரிலும் கம்பீரமாக தோன்றி அதிரடி காட்டியுள்ளார்.

இந்த படத்தை, 'கண்டேன்' படத்தை இயக்கிய இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். நடிகை நிவேதா பெத்துராஜ், கதாநாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நிபிச்சன்ட் சபாக், என்பவர் சபாக் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார். பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் பொன்மாணிக்க வேலாக, ரஜினியுடன் மோதுகிறார் பிரபு தேவா என்பது குறிப்பிடத்தக்கது.