இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' படத்தில் அடிக்கடி, பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பிரபல நடிகருக்கு பதில், வெற்றி பட இயக்குனர் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான, பெரிய பழுவேட்டையார், மற்றும் சின்ன பழுவேட்டையார் வேடத்தில், நடிகர் பிரபு மற்றும் சரத்குமார் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் திடீர் என, சரத்குமார் சின்ன பழுவேட்டையார் கதாபாத்திரத்தில் இருந்து விலகியதாகவும், சரத்குமார் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

எனவே சின்ன பழுவேட்டையார் வேடத்தில் நடிகர் சரத்குமாருக்கு பதில், நடிகர் நிகழ்கள் ரவி கமிட் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், பெரிய பழுவேட்டையார் வேடத்தில் நடிக்க இருந்த நடிகர் பிரபு திடீர் என விலகி விட்டதாகவும், அவருக்கு பதில், பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபுவுக்கு ஜோடியாக நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யாராய், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடி நடிக்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில், இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.