தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் இவர் மாறி, உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, ஒரு வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். 80 பது, மற்றும் 90 களில்... நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது வித்தியாசமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து varum இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக இவரது அழகு... புசு புசுவென்று இருப்பதும், அவர் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியும் தான். ஆனால் தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் இவர் மாறி, உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் உங்களுக்கு என்ன ஆனது பிரபு சார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படத்தை நடிகர் ரகுமான் எடுத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தமிழை தவிர மற்ற தென்னிந்திய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிய மெகா மல்டிஸ்டார் படமான'பொன்னியின் செல்வன்' படத்திலும் ஒரு குக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போது தான் ரஹ்மான் பிரபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். எனவே இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக பிரபு தன்னுடைய உடல் எடையை குறைத்தாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது இவரது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... ரசிகர்கள் சிலரை கவலையடையவும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.