பாகுபலி நாயகன் பிரபாஸ், ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் 7 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனர் பதிலளித்துள்ளார். 

பாகுபலி நாயகன் பிரபாஸ், ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் 7 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனர் பதிலளித்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் தற்போது, 'ஆதிபுருஷ்' மற்றும் 'சலார்' ஆகிய இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார் பிரபாஸ். சலார் படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்த படங்களில் கதையை கேட்கவும் தாயாராகி உள்ளார் பிரபாஸ்.

அந்த வகையில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில், வெளியாகியுள்ள 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் 6 பாகங்கள் உலக அளவில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் 7ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தியில் தீயாக பரவியது. இந்த தகவல் குறித்து நெட்டிசன் ஒருவர் ’மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தின் இயக்குனருக்கு இதுகுறித்த கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதற்கு பதிலளித்துள்ள ’மிஷன் இம்பாசிபிள் 7’ பட இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி, பிரபாஸ் திறமையான நடிகர், ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தொடர்பாக அவரை நான் சந்தித்ததே இல்லை’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் 'மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் பிரபாஸ் நடிப்பார், அவரது காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…