இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'நேர்கொண்ட பார்வை'. இந்த படம் இன்று உலகம் முழுவதும், தமிழில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் ரிசர்வேஷன் கடந்த இரண்டாம் தேதியில் இருந்தே துவங்கி விட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

சென்னையில் மட்டும் 22  திரையரங்கங்களில் திரையிடப்பட்டுள்ள நேர்கொண்ட பார்வை படத்துக்கு, ரசிகர்கள் முன்பதிவுக்கு போட்டி போட்டு வருகிறார்கள். மேலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்புக்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் மத்தியில், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதேபோல், இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரங் ஆகியோருடைய நடிப்பும் பேசப்படும் கதாப்பாத்திரங்களாக அமைந்துள்ளது. மேலும் முதல் முறையாக தமிழில் நடித்துள்ள வித்தியா பாலன் காதல் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அஜித்தின் கோர்ட் சீன் விவாதம் திரையரங்கத்தையே, அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த, நடிகர் பார்த்திபன் "நேர்கொண்ட பார்வை" படம் பற்றிய தன்னுடைய கருத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... "நேரு கொண்ட பார்வை
காங்கிரஸ் கொண்ட பார்வை 
Bjp கொண்ட பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை - பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்" என கூறியுள்ளார்.