பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

புனேவின் ஃபிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டியூட்டில் முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று பின்னர் திரையுலகிற்கு வந்தவர் ஓம்புரி.

1972யில் கஹ்திரம் என்கிற மராத்தி நாடகத்தில் மூலம் அறிமுகம் கொடுத்த இவர், தமிழ், தெலுங்கு,இந்தி,உருது, பஞ்சாபி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் 1௦௦ கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் பத்மஸ்ரீ, தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மரணம் அடைந்தார்.

ஓம்புரியின் மறைவிற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி, பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'ஓம்புரியின் நண்பராக பல ஆண்டுகாலம் இருந்ததற்கு பெருமைப்படுகிறேன். யார் கூறியது ஓம் புரி மறைந்துவிட்டார் என்று, அவர் என்றும் தனது அயராத உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்' என்று கூறியுள்ளார்