கடந்த சில வருடங்களாக, மருத்துவர் பல்லவி என்பவரை காதலித்து வந்த தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த், ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில், தன்னுடைய காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் 'சாம்பரம்' என்கிற படத்தின் மூலம் , சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி நடிப்பு பயணத்தை துவங்கிய நடிகர் நிகில் சித்தார்த், 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஹாப்பி டேஸ் ' படத்தின் மூலம் கதாநாயகனான மாறினார். இந்த படம் வெற்றி அடைந்ததால்  தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

தெலுங்கு திரையுலகில், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிகில் சித்தார்த்துக்கும், இவருடைய காதலிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது . ஏப்ரல் மாதம் இவர்களுடைய திருமணத்தை நடந்த முடிவு செய்யப்பட்ட  நிலையில், கொரோனா  அச்சுறுத்தல் மற்றும், ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. 

ஊரடங்கு நீடித்து வருவதால், நிகில் சித்தார்த் மற்றும் பல்லவியின் குடும்பத்தினர் இவர்களுடைய திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர். அதன் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் தன்னுடைய காதலியை திருமணம் செய்துகொண்டார் நடிகர் நிகில்.

இவர்களுடைய  திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும், முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தியதோடு சமூக விலகலையும் கடைபிடித்தனர். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.