பிரபல நடிகை, தேவயானியின் தம்பி நகுல்... 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தில் செம்ம குண்டாக இருந்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால்... கடின உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்தார்.

இவர் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதை தொடந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மாசிலாமணி', 'வல்லினம்' போன்ற படங்களில் நடித்தார்.

சமீப காலமாக இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. தற்போது இவரின் கை வசம் 'எரியும் கண்ணாடி' என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், இவர் தன்னுடைய மனைவி ஸ்ருதி பாஸ்கருடன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், டிரைவர் வேலை பார்க்கிறேன், சம்பளம் கிடையாது, சரியான உடை கிடையாது, சாப்பாடு கிடையாது... மிகவும் மோசமான பாஸ் என்று கூறி மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு நகுலின் மனைவி ஸ்ருதி , உங்களை விட நான் நன்றாக கார் ஓடுவேன் என்று உங்களுடைய அம்மாவே ஒரு முறை கூறியுள்ளார். நான் ஏன் உங்களை வேலை வாங்க வேண்டும் என கமெண்டில் கூறி உள்ளார்.

அதே போல்... ரசிகர்கள் பலரும் ஸ்ருதிக்கு ஆதரவாக, நகுல் சொல்வது அப்பட்டமான பொய் என்று கண்டுபிடித்து கலாய்த்து வருகிறார்கள்.