தமிழ் சினிமாவில்,  ஒரு சில படங்களில் நடித்தாலும் தன்னுடைய திறமையால் விரைவாகவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முத்து காளை. இவர் முன்னணி காமெடி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து வந்த வேளையில், தொடர்ந்து குடியில் மூழ்கி இருந்ததால், முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்காமலே வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டார்.

தற்போது இவரை சிறு பட்ஜெட் படங்களில் கூட காண முடியவில்லை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலுவுடன் நடிக்க தொடர்ந்து வாய்புகள் வந்தது. அப்போது பணம், மற்றும் பட வாய்புகள் தொடர்ந்து வந்ததால், அல்வா வாசுவுடன் சேர்ந்து எந்நேரமும் குடித்து கொண்டே இருந்தாராம். 

ஒருமுறை வடிவேலு கூட இவரை பார்த்து, இப்படியே எந்த நேரமும் குடித்து கொண்டு இருந்தால், முதல்ல வாசு அதுக்கு அப்பறம் நீ சாக போற என திட்டி விட்டு சென்றுள்ளார். பின்  குடும்பத்தை பற்றி அக்கறையை மனதில் கொண்டு குடி பழக்கத்தை விட்டுவிடும் அட் வைஸ் கொடுத்தாராம். இதனால் ஒரு நிலையில் அவர் சொன்ன வார்த்தை தனக்கு பயத்தை ஏற்படுதியதாகவும் ,  மெல்ல மெல்ல குடிபழக்கதில் இருந்து வெளியே வந்து, தற்போது மனைவி, குழந்தைகளோடு சந்தோஷமாக உள்ளதாகவும். 

அவரின் அந்த வார்த்தைக்கு பின் தன் மனதில் பயம் வந்துவிட்டதாகவும் மெல்ல மெல்ல முயற்சி செய்து குடியை நிறுத்திவிட்டு, குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதுடன், திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் முத்துக்காளை.

மேலும் , தற்போது இவருடைய வாழ்க்கையில் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.  அதாவது அவர் பாலிவுட் திரையுலகில் தயாராகி வரும் 'மேரே இந்தியா' என்ற படத்தில் நடித்து வருகிறாராம். அப்படம் தமிழில் 'நம் இந்தியா' என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழ் காமெடியன் ஒருவர் பாலிவுட் திரையுலகில் முதல் முதலாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.