தமிழில், 'கண்டேன் காதலை', 'ராவணன்', 'ஜனனம்' உள்ளிட்ட தமிழ் படங்களில் இரண்டாவது ஹீரோ... மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் நடிகர் முன்னா. 

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கேரளாவில் பெய்து வரும் கண மழையில் சிக்கி இருக்கும், தன்னுடைய தாய் மற்றும் தந்தையை மீட்டு தருமாறு கதறி அழுதுள்ளார். 

மேலும் தன்னுடைய தாயும், தந்தையும், திருச்சூரில் வெள்ள நீர் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஒரு தேவாலயத்தில் சிக்கியுள்ளதாகவும். அவர்களுடன் சேர்ந்து 2 ஆயிரத்து 500 பேர் அங்கு உணவு, குடிநீர் இன்றி சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் தன்னுடைய தந்தை பிறந்தநாள் என்றும், அவருக்கு இந்த வீடியோ மூலம்   தம்மால் உணவு வழங்க முடியும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தபோது அவர் கண்ணீரோடு பேசியுள்ளது பார்ப்பவர்கள் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.