ராமதாஸ் என்கிற பெயரோடு கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் நடித்த 'ஈசா' படத்தில் துணை நடிகராக அறிமுகமான முனிஷ்காந்த் தன்னுடைய வித்தியாசமான காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர்.

 

இவர், கடல், சூது கவ்வும், நேரம் ஆகிய பல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பை தனித்துவமாக எடுத்துக்காட்டியது, இவர் முனிஷ்காந்த் என்கிற பெயரில் நடித்த 'முன்டாசுப்பட்டி' திரைப்படம் தான். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இன்றி இவருடைய நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை கிடைக்கச்செய்தது.

 

இந்த படத்தை தொடர்ந்து இவரை பலர் ராமதாஸ் என்று அழைப்பதை விட 'முனிஷ்காந்த்' என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். பின் தற்போது இதுவே இவருடைய பெயராகவும் மாறிவிட்டது. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து முன்னேறிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

இன்று தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கும் முனிஷ்காந்த் 50 வயதை கடந்த பின் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடை திருமணம் இன்று வடபழனி கோவிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடந்தது. இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ள பெண்ணின் பெயர் தேன்மொழி. 

இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.