டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் காஜ புயலின் கோர தாண்டவத்தால், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்வி குறியாக மாறியுள்ளது. 

பலர் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவ உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் நடிகர் லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் இவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இத்தனை நாள் திரையுலகின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த பிரபல நடிகர் மோகன்... கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் குதித்துள்ளார்.

 

இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்தார். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், பாய்கள், சோலார் விளக்குகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் வழியில் மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையும் சந்தித்து அவர்களின் சேவையை பாராட்டினார்.

80 களில் முன்னணி நடிகராக இருந்த இவருக்கு, கொடிய நோய் தோற்று இருந்ததாக பரவிய வதந்தியின் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது இவர் தொழிலதிபராக மாறி திரையுலகை விட்டு முற்றிலும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.