Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் 3 ஆவது முறையாக போட்டியிடும் நடிகர்!

தமிழில், பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் நடிகர் ராஜேந்திர நாத், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
 

actor meesai rajendharan contesting dmdk election
Author
Chennai, First Published Mar 18, 2021, 8:04 PM IST

தமிழில், பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் நடிகர் ராஜேந்திர நாத், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமமுகவுடன் தேமுதிக தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. அமமுக தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் இந்த தொகுதி உடன்பாடு செய்து கொள்ள தினகரனோ – பிரேமலதாவோ முன்வரவில்லை. தேமுதிக மற்றும் அமமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. 

actor meesai rajendharan contesting dmdk election

அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்த தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஏற்கனவே இரண்டு முறை, தேமுதிக கட்சியில் போட்டியிட்ட வேட்பாளரும் நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய தோழருமான, நடிகர் மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் நடிகர் ராஜேந்திர நாத்,  தேமுதிக வேட்பாளராக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

actor meesai rajendharan contesting dmdk election

மனுதாக்கல் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆலங்குளம் தொகுதியில் பிரதான தொழிலான பீடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என்றும், பீடி தொழிலாளர்களுக்காக இயங்கும் மருத்துவமனையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லை அதனை சரி செய்து கொடுக்க நடவடிக்கை மற்றும் ஆலங்குளம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios