தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். கிட்டத்தட்ட 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும் , ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை முழுவதுமாக விசாரிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கவுதமி மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து தற்போது முதல்வர் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அவரின் மரணத்தில் நிறைய மர்மங்கள் உள்ளது என்றும் . எனவே இதனை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி முதல்வரின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.