நிற்க கூட முடியாத ரசிகர்! மகேஷ் பாபு செய்த செயல்! நெகிழ்ச்சி வீடியோவை பார்த்து குவியும் பாராட்டுக்கள்!

பெரிய நடிகர்களை பார்க்க, பல ரசிகர்கள் அவர்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தவம் கிடைக்கும் நிலையில், அடிக்கடி தன்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்காக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஏற்பாடு செய்து, ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்து வருகிறார்.
 
actor magesh babu official fan meet video

மேலும், தன்னை பார்க்க ஆசை படும் ரசிகர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், திடீர் என அவர்கள் வீட்டிற்க்கே சென்று சர்பிரைஸ் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

actor magesh babu official fan meet video

இவரின் இந்த  செயல்பாடுகள் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை, தெலுங்கில் மட்டும் இன்றி மகேஷ் பாபுவிற்கு தமிழ் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் ஏக்க சக்கம்.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களுக்கு முன், இவர் ரசிகர்களை சந்தித்த நிகழ்வின் போது, நிற்க கூட முடியாத நிலையில் ஒரு ரசிகர் மகேஷ் பாபுவை காண வந்துள்ளார். அவரை மற்ற ரசிகர்கள் தூக்கி வந்து, மகேஷ் பாபு பக்கத்தில் நிற்க வைக்க முயற்சித்த போது, மகேஷ் பாபுவும், அந்த மாற்று திறனாளி ரசிகரை கீழே இறக்கி, கட்டி அணைத்து நிற்க வைத்து பேசியதுடன், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டாந்து மகிழ்வித்துள்ளார். 

actor magesh babu official fan meet video

இது குறித்த, வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நெகிழவைக்கும் விடியோவை பார்த்து, மகேஷ் பாபுவிற்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

பெரிய நடிகர் என்கிற அந்தஸ்தை அடைந்ததும், ரசிகர்களை பார்த்து கை  அசைத்து விட்டு கடந்து செல்லும் நடிகர்கள் மத்தியில், மகேஷ் பாபுவின் செயல்களை ரசிகர் பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios