பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படப்பிடிப்புக்காக இந்தியாவில் இருந்து, துபாய் சென்ற நிலையில்... இவர் தன்னந்தனியாக தான் மட்டுமே சென்றதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படப்பிடிப்புக்காக இந்தியாவில் இருந்து, துபாய் சென்ற நிலையில்... இவர் தன்னந்தனியாக தான் மட்டுமே சென்றதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பிரச்சனை தலை தூக்கியத்தில் இருந்து, விமான சேவைகளின் எண்ணிக்கை ஒரு புறம் குறைத்துள்ளது என்றால், மற்றொரு புறம்... வெளிநாடுகளுக்கு செல்பவர்களும் எண்ணிக்கையும் குறைத்துள்ளது. முன்பெல்லாம் அவசரத்திற்கு வெளிநாடு செல்ல டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது. இப்போதோ அனைத்து விமானங்களும் பயணிகள் இல்லாமல் காத்து வாங்கி வருகிறது. 

இதுகுறித்த பிரபல நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இவர் தற்போது நடித்து வரும் 'அம்ரித்தி பண்டிட்' என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற போது, தான் ஒருவர் மட்டுமே பயணம் செய்ததாகவும், பறந்து விரிந்த விமான நிலையத்தில் ஒரு சிலர் மட்டுமே இருப்பதையும் வீடியோ வெளியிட்டுள்ளார். 

நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும், அந்த ஒரே பயணி நமது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ராக்கெட்டரி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

View post on Instagram