இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த மின்னலே, ரன் உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றிப்பெற்றதால் தமிழில் முன்னணி நடிகராக வளம் வந்தார். பின் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்திய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சில காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

ரீஎன்ட்ரி:

இயக்குனர் சுதா கங்கோரா இயக்கிய இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்த இருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் கடந்த ஆண்டின் சிறந்த படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கெளதம் மேனன் இயக்கத்தில்:

தற்போது கௌதம் மேனன் இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் சிம்பு கதாப்பாத்திரத்தில் மாதவன் தான் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

இந்த நிலையில் தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவன் பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். 

 

மாதவனுக்கு நடந்துள்ள இந்த அறுவை சிகிச்சையால் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.