இயக்குனர்கள் சுந்தர்.Cயின் பத்ரி, உள்ளிட்ட பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய அஸ்வின் மாதவன். இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'கலாசல்'. 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற  உள்ளது.

இந்த படத்தில்,  சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன் கதாநாயகனாகவும், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். 

மேலும் இந்த படத்தின் கதையை ஒரு வரியில் கூறிய இயக்குனர்... "மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதை கேட்டு பெறுவது  பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.

நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் லிவிங்ஸ்டன் அழகை தாண்டி தன்னுடை திறமையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். ஆனால் அவருடைய மகள் ஜோவித்தா கொள்ளை அழகால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் இதோ..