Actor King Arjun becomes Karnataka Chief Minister
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகனுமாகிய குமாரசாமி, ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பங்கு பெற்றவர்.
தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு ’பூமி புத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
“பூமி புத்ரா” என்ற பெயரை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால், அந்த பெயரை முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு சொந்தமான சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது.
அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை தானே தயாரிக்க உள்ளார் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில்தான் முன்னாள் முதல்வர் குமாரசாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.நாராயணன் இந்த படத்தை இயக்குகிறார்.
