'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து நடிகர் கதிர், விஜய்யின் 63 ஆவது படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை அடுத்து இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு, தற்போது வெளுத்து வாங்கும் வெயிலுக்கு இதமாக 'சர்பத்' என பெயர் வைத்துள்ளனர் படக்குழுவினர்.

மேலும் இந்த படத்தில், நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ள இரண்டு போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளதில் இருந்து தெரிகிறது.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, அஜீஷ் இசையமைத்துள்ளார். பிரபாகரன் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.