நடிகர் கதிர் - சஞ்சனா திருமணம்...!
பிரபல இசையமைப்பாளரும் நடிகரும்மான ஜி.வி.பிரகாஷ் முதல் முதலில் தயாரித்த திரைப்படமான 'மதயானை கூட்டம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கதிர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஓவியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிய கதிர், கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா, ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவருடைய நடிப்பில் சிகை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுகும் நாளை ஈரோட்டில் திருமணம் நடைப்பெற உள்ளது. நடிகர் கதிரை திருமணம் செய்துக்கொள்ளப் போகும் சஞ்சனா பிசினஸ் சம்மந்தப்பட்ட படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.
ஈரோட்டில் நடைப்பெறும் கதிர் - சஞ்சனா திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொள்கின்றனர். சென்னையில் நடைப்பெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.