actor kathi magesh worst review for bavan kalyan movie

எந்த ஒரு முக்கிய நடிகரின் படம் வெளிவந்தாலும் அந்தப் படம் பற்றி நடிகர் நடிகைகள், தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள். மேலும் அந்தப் படம் பிடித்திருந்தால் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவிப்பார்கள். இது பல காலமாக அரங்கேறி வரும் ஒரு செயல் தான்.

ஆனால் தற்போதுள்ள ரசிகர்கள்... தங்களுக்குப் பிடித்த நடிகர் பற்றி யாராவது குறை சொன்னால் அவர்களை எந்த வழியில் பழி வாங்குவது என கங்கணம் கட்டிவைத்துக்கொண்டு பழி தீர்த்து விடுகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி', திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தைப் பற்றி பிரபல நடிகர் கத்தி மகேஷ் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. 

தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை சும்மா விடுவார்களா என்ன, கத்தி மகேஷின் புகைப்படத்தை கழிவறையில் ஒட்டியுள்ளனர். இதனைப் பார்த்த கத்தி மகேஷ் இதுதான் பவன் கல்யாண் ரசிகர்கள் என்று கூறி அதனை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் ஷேர் செய்துள்ளார். 

Scroll to load tweet…