பாடகி சுசித்ராவின் (suchitra) முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் (Karthik Kumar), நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, தெய்வத்திருமகள் உள்பட சில தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தவர் கார்த்திக் குமார் (Karthik Kumar). புகழ்பெற்ற ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இவர் திகழ்ந்து வருகிறார். பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான சுசித்ராவை (suchitra) திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார், தற்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி மேயாத மான், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் (Amrutha Srinivasan) என்பரை கார்த்திக் தற்போது கரம்பிடித்துள்ளார். சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இவர்களது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் அவருக்கு திருமணமான தகவல் வெளியே வந்துள்ளது. நடிகர் கார்த்திக் குமார் - நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.