நடிகர் விஷாலை வைத்து, 'இருபுதிரை', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய... இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தியின் கை வசம், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மட்டுமே இருந்தது. மேலும் நடிகர் கார்த்தி, இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது .

இதனை உறுதி செய்யும் விதமாக படக்குழு தற்போது, கார்த்தியின் வித்தியாசமான லூக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் கார்த்தி வயதான தோற்றத்தில் உள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

ஜிவி. பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ரூபன் - படத்தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார். மேலும், திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ப்ரிஸ் பிச்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.YouTube video player