நிர்பயா இந்த பெயரை கேட்டால் இந்தியாவே அதிர்ச்சி உறையும். 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை கற்பழித்து சித்ரவதை செய்த 4 குற்றவாளிகளுக்கும் இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், நீதி நிலைநாட்டப்பட்டதை பாரத பிரதமர் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் கார்த்தி. அண்ணன் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை போலவே, விவசாயிகளுக்காக உழவன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கும் கார்த்தி, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு உடனடியாக கருத்து தெரிவித்து வருகிறார். அதன் படி, மருத்துவ மாணவியை சிதைத்த அந்த 4 மனித மிருகங்களுக்கு வழங்கப்பட்ட தண்டணை குறித்து, நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “இறுதியாக 8 வருடங்கள் கழித்து, நிர்பாயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து தண்டனை கிடைக்குமோ” என கேள்வி எழுப்பியுள்ள கார்த்தி, ஏற்கனவே பொள்ளாச்சி வழக்கில் ஓராண்டு ஆகியுள்ளதையும் நினைவுப்படுத்தியுள்ளார்.