Actor Karthi met with fans Interesting discussion about Teeran ...

திருநெல்வேலியில் ரசிகர்களை சந்தித்து தீரன் திரைப்படம் குறித்து சுவாரசியமாக கலந்துரையாடினார் நடிகர் கார்த்தி.

தீரன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் குறித்து படத்தின் கதாநாயகன் கார்த்தி, தனது ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி திருநெல்வேலி திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

அந்தச் சந்திப்பின்போது கார்த்தி கூறியது:

"தீரன் திரைப்படம் காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது.

காவலர்கள் படும் சிரமங்கள், இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களின் கஷ்டம் ஆகியவற்றை உணர்த்துவதுடன் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.