உலக நாயகன் கமலஹாசன், தன்னுடைய 90 வயது நண்பரை இழந்து விட்டதாக சோகத்துடன் ட்விட் செய்துள்ளார்.

பல்வேறு புத்தகங்களை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எழுதி, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் பிரான்ஸ் நாட்டை சேர்த்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஜான் கிளாட் கேரியார். இவரது புத்தகங்களுக்கு என கோடிக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். 

90 வயது ஆகும், எழுத்தாளர் ஜான் கிளாட் கேரியார் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக அவதி பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இதனை இவரது ரசிகர்கள் மற்றும், எழுத்தாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகரும்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்’ என்று பதிவு செய்துள்ளார்".