உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கோரோனோ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்திலும் பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36 பேருக்கு கோரோனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், அனைவரையும் வீட்டின் உள்ளேயே இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அவரது எல்டாம்ஸ் சாலை வீட்டின் முன் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளது.

இந்த நோட்டீஸில் ’மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகர் கமல் கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமை படுத்தப்பட்டுள்ளார் என்கிற வதந்தி வைரலாக பரவியது.

இதில் உண்மை இல்லை என்பதை கூறும் விதமாக நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து அவசர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில்... அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்...

உங்கள் அனைவரின் அன்பிற்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மையத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

நடிகர் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் தலையில் அடித்து கொண்டு கதறியபடி உறவினர் சொன்ன விஷயம்!

எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மை அல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்துதல் மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ள கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதனை உறுதி செய்து வெளியிட வேண்டிக் கொள்கிறேன். என நடிகர் கமலஹாசன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.