வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக... கடந்த இரண்டு நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது செம்பரம்பாக்கம் ஏரியும் நேற்று திறந்து விட பட்டதால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் தேக்கமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவர் புயல் பாதிக்க பட்ட மகாபலிபுரம், மரக்காணம், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதே போல் திமுக தலைவர், முக ஸ்டாலின் பல்வேறு நிவார பணிகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன்... சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.