தமிழ் திரையுலக நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் (ஜூலை 14 )  இன்று நடைபெற்றது. இதில் நடன இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றினர்.

அந்த வகையில் சென்னை, தி.நகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் முன்னிலையில் தேர்தல் நடந்தது. 

தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி மாஸ்டர்  மற்றும் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த தேர்தலில், உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டு தன்னுடைய வாக்கை அளித்தார்.  இந்த தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.