MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்னாள் காதலிக்காக... இளையராஜா இசையமைத்த பாடல் பற்றி தெரியுமா?

முன்னாள் காதலிக்காக... இளையராஜா இசையமைத்த பாடல் பற்றி தெரியுமா?

இசைஞானி இளையராஜா பல காதல் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் முன்னாள் காதலியை நினைத்து காதலன் பாடும் ஒரு உணர்வுப்பூர்வமான பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2026, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja Song Secret
Image Credit : Ilaiyaraaja/ Facebook

Ilaiyaraaja Song Secret

இளையராஜாவின் இசையை பிடிக்காத ஆளே இருக்க முடியாது. காலம் கடந்தாலும் அவரது பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்கள் ஒரு மாதத்திற்கு மேல் போர் அடித்துவிடுகின்றன. ஆனால் இளையராஜாவின் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அந்த அளவுக்கு ஆத்மார்த்தமான இசையால் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. இளையராஜாவின் இசையில் பல்வேறு காதல் பாடல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு தனித்துவமான பாடலைப் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.

24
அழகி பட பாடல் ரகசியம்
Image Credit : our own

அழகி பட பாடல் ரகசியம்

கடந்த 2002-ம் ஆண்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான திரைப்படம் அழகி. இப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தார். அவரின் மனைவியாக தேவையானியும், முன்னாள் காதலியாக நந்திதா தாஸும் நடித்திருந்தனர். அழகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டது இசைஞானி இளையராஜாவின் இசையும் பாடல்களும் தான். இப்படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா, பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி பாடல், குருவி கொடஞ்ச கொய்யா பழம் போன்ற பாடல்கள் அடிபொலி ஹிட் அடித்தன.

Related Articles

Related image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Related image2
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
34
உன் குத்தமா என் குத்தமா பாடல்
Image Credit : our own

உன் குத்தமா என் குத்தமா பாடல்

இப்படத்திலேயே மற்றுமொரு ஸ்பெஷல் பாடல் இருக்கிறது. உன் குத்தமா என் குத்தமா என தொடங்கும் அப்பாடல் வரிகளை பழனி பாரதி எழுதி இருந்தார். இந்த பாடலின் சிச்சுவேஷனே வித்தியாசமானது. நாயகன் பார்த்திபன், தான் பள்ளிப் பருவத்தில் உருகி உருகி காதலித்த தன்னுடைய முன்னாள் காதலியை ஒரு கடினமான சூழ்நிலையில் சந்திக்கிறான். அவளின் நிலையை பார்த்து இடிந்துபோகிறார் பார்த்திபன். எப்படியெல்லாம் வாழவேண்டிய பெண், இப்படி இங்கு நடுரோட்டில் கஷ்டப்படுகிறாலே என்கிற மனவேதனையில் நாயகன் இருக்கும் போது இந்தப் பாடல் தொடங்கும்.

44
முன்னாள் காதலிக்காக உருவான பாடல்
Image Credit : our own

முன்னாள் காதலிக்காக உருவான பாடல்

காதல் கைகூடாமல் போனவர்கள் இந்தப் பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். அந்த அளவுக்கு இந்த பாடலில் இசையும், வரிகளும் மனதை ரணமாக்கும். இதற்கெல்லாம் கூடுதல் வலுசேர்க்கும் விதமாக இசைஞானி இளையராஜாவின் குரல் அமைந்திருக்கும். அவர் தன்னுடைய குரலால் அந்த காதலின் வலியை கடத்தி இருப்பார். முன்னாள் காதலியை திருமணத்துக்கு பின் பார்க்கும் நாயகனின் சூழலை சொல்லும் ஒரு உணர்வுப்பூர்வமான பாடலை இளையராஜாவை விட வேறு யாரும் கொடுத்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு அப்பாடலை கம்போஸ் செய்திருப்பார் இசைஞானி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் எதிர்நீச்சலில் ‘அய்யனார் துணை’ நிலா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Recommended image2
வீடு தேடி வந்த 100 கோடி டீல்... ரிஜெக்ட் பண்ணிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா - பின்னணி என்ன?
Recommended image3
ஆளவிடுமா தாயி... டிராமா போட்ட தங்கமயில்; தரமான பதிலடி கொடுத்த கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Recommended image2
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved