பார்க்கவே ரொம்ப கியூட்டா... கொழு கொழுன்னு அம்மா கையில் சும்மா ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த குழந்தை தற்போது வளர்ந்து ஆளாகி, நடிகராக உள்ளார்.

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்:

இவர் வேறு யாரும் இல்லை, தமிழ்,  மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், நடிகர் ஜெயராம் - பார்வதி நட்சத்திர ஜோடிகளின் செல்ல மகன் காளிதாஸ்.

குழந்தை நட்சத்திரம்:

இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து படிப்பில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய லயோலா கல்லூரியில் நடிப்பு சம்பந்தமான படிப்பை தேர்வு செய்து படித்த இவர், தமிழில் தான் முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

கதாநாயகன் அவதாரம்:

அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவுடன் சேர்ந்து மண் பானையும் மீன் குழம்பும் என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதை தொடர்ந்து மலையாள படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். இவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை தொடர்ந்து தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

ஒரு பக்க கதை:

தமிழில் சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்க காத்திருந்த காளிதாஸ், இயக்குனர் ராம் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு சில காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது.

அம்மாவுடன் கியூட் போட்டோ:

இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதியால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய பழைய நினைவுகளை அசை போட்டு வரும் நிலையில் நடிகர் காளிதாஸ் குழந்தையாக இருக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ:  

 

View this post on Instagram

Happy Birthday amma ♥️😘

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram) on Apr 6, 2020 at 9:32pm PDT