பிரபல குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டின் தந்தை காலமானார்...

50க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கும்  பிரபல நடிகர் காளிவெங்கட்டின் தந்தை நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.
 

actor kali vengat's father passes away

50க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கும்  பிரபல நடிகர் காளிவெங்கட்டின் தந்தை நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.actor kali vengat's father passes away

'முண்டாசுப்பட்டி', 'தெகிடி', 'இறுதிச்சுற்று', 'மெர்சல்', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் காளி வெங்கட். ’2010 ல் ‘தசையினை தீ சுடினும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான வெங்கட் அப்படத்தில் தனக்கு சூட்டப்பட்ட ‘காளி’யை தன்பெயரோடு இணைத்துக்கொண்டு காளி வெங்கட் ஆனார்.ஆனால் அப்படம் இன்று வரை ரிலீஸாகவில்லை.actor kali vengat's father passes away

இவரது தந்தை தவசி பாண்டியன். 79 வயதாகும் இவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை அரும்பாக்கத்தில் உள்ள அரது வீட்டில் நடைபெறவிருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகில் நடிகர் காளி வெங்கட்டிற்கு நெருக்கமானவர்கள், அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை நடைபெறவிருக்கும் இறுதிச்சடங்கில் திரையுலைகச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios