’விஜய்,விக்ரம், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டாலும் எனது நீண்ட நாள் ஆசை என்பது தல அஜீத்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான்’ என்கிறார் நடிகர் ஜீவா.

ஜீவா நடிப்பில் ’கீ’, ’கொரில்லா’, ’ஜிப்சி’ என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இந்தியில் பிரம்மாண்டமாகத் தயாராகும் ’83 [கபில்தேவ் உலகக்கோப்பையை வென்ற கதை] படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடிக்கிறார்.

லண்டனுக்கு ‘83 படப்பிடிப்புக்குக் கிளம்பிச் செல்வதால் அடுத்த ரிலீஸான ‘ஜிப்சி’ பட புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் ஜீவா, ’’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் பெஸ்ட் என்றால் அது ஜிப்சிதான் என்றார்.

இதுவரை ஆர்யா,விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.  ஆனால் என் நீண்டநாள் ஆசை என்பது தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே . அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’ என்று வெட்கத்தை விட்டு சான்ஸ் கேட்கிறார்  ஜீவா.