அதை கெளரவிக்கும் விதமாகவும், மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடிகர் ஜீவா செய்துள்ள இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.  

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால் அதை பலரும் கேட்பதாக தெரியவில்லை. ஏதோ பண்டிகை கால விடுமுறை போல கொண்டாட்டத்துடன் பைக்கில் ஏறி ஊர் சுற்றி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். வீம்பு பிடிச்ச சிலரோ எது நடந்தால் எங்களுக்கு என்ன... நாங்க வழக்கம் போல கும்பலாக சுத்துவோம் என வெளியே வந்து போலீசாரிடம் வாங்கி கட்டிக்கொள்கின்றனர். 

தடியடி, தோப்புக்கரணம், கொரோனா உறுதிமொழி என விதவிதமாக எத்தனை தண்டனை கொடுத்தாலும், நம்ம புள்ளிங்கோ அக்கப்போரு தாங்க முடியவில்லை. கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் வெளியே ஜாலியாக சுற்றித் திரிகின்றனர். இன்னும் சிலரோ குடும்பம், குடும்பமாக கார், பைக்கில் ஊர் சுற்றுவதையும் காண முடிகிறது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: “படிச்சவங்க தானே, உங்களுக்கு அறிவே இல்லையா?”... மழலை மொழியில் வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி...!

இதை அறிவுறுத்தும் விதமாக நடிகர் ஜீவா தனது ட்விட்டர் ஐடியின் பெயரை உள்ளே போ என மாற்றியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதை கெளரவிக்கும் விதமாகவும், மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடிகர் ஜீவா செய்துள்ள இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.