actor jegam car accident and one person death
நடிகர் ஜெகன் சின்னத்திரையில் 'கடவுள்பாதி மிருகம்பாதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரை ஒரு சிறந்த காமெடி நடிகராக அடையாளம் காட்டியது சூர்யாவுடன் இவர் நடித்த 'அயன்' திரைப்படம் தான்.
திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், ஏற்றி விட்ட ஏணியை மறவாத இவர் சின்னத்திரை நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சில சமயங்களில் இவர் நிகழ்சிகளில் பேசும் வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளதாக இருக்கும். இதனால் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ஜெகன் வந்தவாசியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் ஹுசைன் என்கிற இளைஞர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து இவரை மேல்சிகிச்சைக்காக பொதுமக்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்து போலீசார் நடிகர் ஜெகனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
