Actor Jay To Notice To Give Original License - Traffic Safety ...
போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக நடிகர் ஜெய்யிடம் அசல் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைக்குமாறு போக்குவரத்து காவலாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர்கள் ஜெய்யும், பிரேம்ஜியும் போதையில் கார் ஓட்டி அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய் இதுபோல் இரண்டு முறை போதையில் வாகம் ஓட்டியுள்ளதால் அவரது ஓட்டுனர் உரிமம் ரத்தாகிறது. இதனால் நடந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்கும் படியும், ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைக்கும் படியும் போக்குவரத்து அதிகாரிகள் ஜெய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
