Asianet News TamilAsianet News Tamil

Kuttrame Kuttram :பீஸ்ட், கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் எதிரொலி... நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் நடிகர் ஜெய் படம்

Kuttrame Kuttram : ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Actor jai starrer Kuttrame Kuttram movie direct TV premiere
Author
Tamil Nadu, First Published Apr 9, 2022, 4:09 PM IST

விஜய்யின் ‘பகவதி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த ‘சென்னை 600028’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சசிகுமார் இயக்கத்தில் 'சுப்ரமணியபுரம்', ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’, அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனதால் நடிகர் ஜெய் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது இவர் கைவசம் அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குற்றமே தண்டனை. வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டியநாடு, நான் மகான் அல்ல என பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் நடிகர் ஜெய் உடன் அவர் கூட்டணி அமைக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் அவர்கள் இருவரும் இணைந்து வீரபாண்டியபுரம் என்கிற படத்தில் பணியாற்றினர். இப்படம் கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில், குற்றமே குற்றம் படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குக்கு பதிலாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். கொலை குற்றத்தை மையப்படுத்தி கிராமத்து பாணியில் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புதுமுக நடிகை திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

மேலும் பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில், அஜீஸ் இசையில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... தனுஷ் பட ஹீரோயின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை.... ரூ1.41 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போனதால் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios