நடிகர் ஜெய் தற்போது சுந்தர் சி. தயாரிப்பில், இயக்குனர் பத்ரி இயக்கி வரும் படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஜெய் காயமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவரே அதனை உறுதி செய்துள்ளார். 

நடிகர் ஜெய் தற்போது சுந்தர் சி. தயாரிப்பில், இயக்குனர் பத்ரி இயக்கி வரும் படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஜெய் காயமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவரே அதனை உறுதி செய்துள்ளார்.

நடிகர் ஜெய் 'சென்னை 600028 ' படத்தை தொடர்ந்து நடித்த, 'சுப்ரமணியபுரம்' படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த போதிலும், அடுத்தடுத்த படங்களை சரியாக தேர்வு செய்வதில் கோட்டை விட்டதால் பட வாய்ப்புகளை இழந்தார். எனினும் அவ்வப்போது இவர் நடிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' போன்ற படங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கவே ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதே நேரத்தில் சரியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்வது இல்லை என்பது போன்ற சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், தற்போது இவரின் கை வசம், 'பிரேக்கிங் நியூஸ்', 'பார்ட்டி', 'குற்றமே குற்றம்', கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படம், இயக்குனர் பத்ரி இயக்கத்தில், சுந்தர் சி தயாரிப்பில் ஒரு படம் என சுமார் 7 படங்கள் உள்ளது. இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சித்தர் சி, தயாரித்து நடித்து வரும் படத்தில்... ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு செட் போட்டு பிரபல ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆக்ஷன் காட்சியின் போது நடிகர் ஜெய்க்கு எதிர்பாராத விதமாக வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான காயம் என்பதால்... பிசியோ தெரபி சிகிச்சை மட்டுமே எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்த்ததாக கூறியுள்ளார்.

இவருக்கு அடிபட்ட தகவல் குறித்து செய்திகள் வெளியான நிலையில், நடிகர் ஜெய் அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்கள் தற்போது வில்லன், குணச்சித்திர வேண்டாம் என பிரித்து பார்க்காமல் நடித்து அசத்தி வரும் நிலையில்... அவரை தொடர்ந்து தற்போது ஜெய்யும் விஜய் சேதுபதி பாணியை பின்பற்றி வருகிறார். அவரை போலவே இவரும் வில்லன், நாயகன், என இரண்டிலும் கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Scroll to load tweet…