விஜய் - அஜித் வில்லன்களுடன் மோத தயாராகும் பிரபல நடிகர்... சூப்பர் ஹீரோவாக அதிரடி திட்டம் போட்ட ஜெய்...!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. யு-டியூப்பில் வெளியான டிரெய்லரை இதுவரை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இரண்டு பொண்டாட்டிகாரனாக சேட்டை செய்துள்ள ஜெய்க்கு ஜோடியாக, அதுல்யா, வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் லிப் லாக், படுக்கையறை காட்சிகள், குளியலறை காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏகப்பட்ட கசமுசா இருப்பதால் தணிக்கை குழு 'கேப்மாரி' படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த வயசில இப்படி ஒரு படத்தை எடுக்கனுமான்னு என்ன தான் விமர்சனம் எழுந்தாலும், இளைஞர்களிடையே படத்திற்கு வரவேற்பு தான் கிடைச்சிருக்கு. 

இந்த படத்தை தொடர்ந்து 'பிரேக்கிங் நியூஸ்' என்ற படத்தில் ஜெய் நடிக்க உள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக பானு என்ற புதுமுகம் அறிமுகம் ஆகுறாங்க. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடைய முதல்வன், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு விஷூவல் எஃபெக்ட்ஸ் கொடுத்த அண்ட்ரோ பாண்டியன் தான், இந்த படத்தை இயக்க உள்ளார். இதுவரைக்கும் சாக்லெட் பாய் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த ஜெய், இந்த படம் மூலம் சூப்பர் ஹீரோவா அதிரடி அவதாரம் எடுத்திருக்கார். அதனால் சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பு கவனம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமில்லாம, தன்னை மாஸ் ஹீரோவா காட்டனுன்னா என்ன பண்ணனும். மாஸ் ஹீரோக்களின் வில்லன்கள் கூட மோதனுன்னு முடிவு பண்ணியிருக்காரு ஜெய். அதுக்காக 'சுறா' படத்தில விஜய்க்கு வில்லனாக நடித்த தேவ்கில் கூடவும், 'வேதாளம்' படத்தில அஜித் கூட சண்டை போட்ட ராகுல் தேவ் கூடவும் மல்லுக்கு நிற்க முடிவு எடுத்திருக்கார். இரண்டு பேரும் தல, தளபதியை கலங்க வச்ச வில்லன்கள் என்பதால் அவங்களுக்கு சமமா பாடிபில்டிங் எல்லாம் பண்ணி முழு ஆக்‌ஷன் ஹீரோவா ஜெய் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.