வருடத்திற்கு ஒருமுறை மாட்டிக்கொள்ளும் நடிகர் ஜெய்..!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் ஒரு ஹீரோ என்றால் அது ஜெய் என சொல்லலாம்.

நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடேயே நல்ல  வரவேற்பை பெற்று உள்ளார்.

இதெல்லாம் அவரை பற்றிய புகழை பாடுவதாக இருந்தாலும், நிஜ வாழ்கையில் அடிக்கடி சரக்கடித்து விட்டு மட்டையாகி விடுகிறார்...

அது மட்டுமா பாதி மப்பில் காரை அவரே இயக்குவது...எங்காவது மோதுவது என பலமுறை இது போன்ற நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் ஜெய்....

இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டு செப்டெம்பர்  22  ஆம் தேதி  தன்னுடைய சக  நண்பர்களுடன் சேர்ந்து நன்கு குடித்து விட்டு, ஸ்டார்  விடுதியில் இருந்து புறப்பட்டு உள்ளனர்.

மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கி வரும் போது, மேம்பாலம்  தடுப்பு சுவர் மீதி மோதி, போதை மயக்கத்தில் அப்படியே சாய்ந்து  உள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அவரால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. அவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை....இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் கோர்டில் ஆஜரானார் ஜெய். 6 மாதத்திற்கு லைசன்ஸ் கூட ரத்து செய்தனர்  

இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு, தன்னுடைய ஆடி காரில் அதிக சப்தத்தை எழுப்பக்கூடிய ஒலியை எழுப்பும் ஹார்ன்  வைத்துகொண்டு, மிகவும் வேகமாக வந்துள்ளார்.

விதிகளை மீறி அதிக சப்தம் எழுப்பும் சைலன்சர்

விதிகளை மீறி சப்தம் எழுப்பும் சைலன்சரை பொருத்திக்கொண்டு, நேற்று இரவு நடிகர் விஜய் அடையாறு நோக்கி சிங்கம் போல் பாய்ந்து வருவதைக்கண்ட போலீசார், யானைபோல் வழிமறித்து ஜெய் ஓட்டி வந்த ஆடி காரை நிறுத்தினர்.

பின்னர், அவரையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேச வைத்து வீடியோ எடுக்கப்பட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

அதில் ஜெய் ,"இது போன்று அதிக சப்தத்தை எழுப்பக்கூடிய சைலன்சரை பயன்படுத்தக் கூடாது...இதனால் மற்றவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கும், மேலும் மருத்துவமனை, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பொதுமக்கள் மற்றும் உறக்கத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் மிகவும் தொந்தரவாக இருக்கும்..எனவே இனி இது போன்று செய்ய கூடாது என நடிகர் ஜெய் தெரிவித்து உள்ளார்.

இவர் மீது போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்து உள்ளனர்.