தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்களுக்கு எடுத்து காட்டாக உள்ளவர் காமெடி கிங் கவுண்டமணி. இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதாக வெளியான வதந்தியால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த வதந்திக்கு நடிகர் கவுண்டமணி தரப்பில் இருந்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

திரையுலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும், கவுண்டமணியின் கவுண்ட்டர் வேற லெவலில் இருக்கும். இவருடைய காமெடிய காட்சிகள் வளர்ந்து வரும் பல இளம் காமெடி நடிகர்களுக்கு ரோல் மாடல் என்றால் அதனை மறுக்க முடியாது.

இந்நிலையில் தான் இன்று காலை முதல், கவுண்டமணி உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வருவதாக, சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவியது. இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடிகர் கவுண்டமணி நலம்.. அவர் வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து தீயவர் சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வேடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி வீட்டில் முற்றிலும் நலம்’ என  தெரிவித்துள்ளனர். இந்த தகவல் இவரது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.