பிரபல மலையாள நடிகர் ஒருவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கேரளாவில் உள்ள கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் ஒரு புறம், இருந்தாலும் அவரவர் வாழ்க்கையில் நடக்கும் நல்லது... கேட்டது என அனைத்தும் நல்லபடியாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது. 


.
அதே நேரத்தில், ஒருவர் வாழ்க்கையில் ஒரே முறை நடக்கும் திருமணத்தை... பெற்றோர் சீரும் சிறப்புமாக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என எண்ணி இருந்தாலும், தற்போது நிலவி வரும் சூழலால் அது முடியாமல் உள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் கோகுலன் தனது திருமணத்தை கோவிலில் மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார்.
நெருங்கிய குடும்பத்தினர் சிலர் மட்டுமே இவரது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

ஏற்கனவே முடிவு செய்தபடி நடிகை கோகுலன், தன்யா திருமணம் இன்று எர்ணாகுளம் கோவிலில் நடந்து முடிந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும், மாஸ்க் அணிந்தபடியும், சமூக இடைவெளியையும் பின்பற்றி உள்ளனர்.

நடிகர் கோகுல்முன்னணி நடிகர்களுடன் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் தாங்கள் அணிந்திருந்த உடைக்கு ஏற்றவாறு மாஸ்க் அணிந்து மணமக்கள் கொடுத்த  போஸ் தற்போது வைரலாகி வருகிறது. இவருக்கு ரசிகர்கள் மற்றும் இவருடன் நடித்த பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.